Saturday, December 21, 2013

The Best Real Life Motivational Story – Károly Takács

The Best Real Life Motivational Story – Károly Takács

14AUG

karoly Takacs 001
The moment I finished the first page of my first and most favorite motivational book “The Magic of Thinking Big” by David J. Schwartz, I have been looking for tools to craft a better “me”. I have been trying to bring out the best in me. I have browsed many books, sites and articles and I have found a plenty of tools that can come in handy. There is this one story in particular that I can’t wait to share with you. It’s about a sergeant in Hungarian army – Károly Takács.
Károly was the top pistol shooter of the country back in 1938 (age – 28 yrs). He won most of the major national and international championships. He seemed closest to winning the 1940 Tokyo Olympic Games gold medal. All the dreams turned to dust one day. A hand grenade exploded in Károly’s right hand, his shooting hand at an Army training session. That hand grenade ended up destroying his shooting hand and his Olympic dream.
“Of all the people in the world, why me?” Like most of us Károly could have asked this question “why me?”. But he didn’t. Now I am not very sure what happened during the time he was hospitalized. But chances are people were discussing about the tragedy that has fallen on him, about how cruel can the creator be?, about what will he do in future. I am pretty sure people would have discussed these things. But not Károly, he had nerves of steel, stainless steel. He could have looked for sympathy. Instead he looked for ways to convert his dream into beautiful reality.
After spending a month in hospital, he decided not to feel pity for himself for the rest of his life. He held on to his Olympic dream. He had the will, he had the attitude, he had the determination to succeed, and he figured he had a healthy, fully functional hand. He decided to practice shooting from his left hand. Despite the pain he had to undergo, despite the fact that he was not left handed, he focused on his goal and practiced. To achieve anything worthy in life one needs attitude and will. Skills and techniques can learned, can be taught, but not will. He chose not dwell in the world of facts, he chose to explore the world of possibilities. He was determined to make his left hand the best shooting hand in the world.
One year later Károly resurfaced at a National shooting championship in Hungary. His colleagues were delighted to see him and complimented him on his courage to come up at the championship to cheer for them. But Károly surprised them by saying he was there to compete with them. And he won. One year after losing his right hand and he trained himself and won. Who in the world except Károly himself would have thought this was even possible. People who believe in facts will never be able to explain this. Facts leave no room for possibilities.
Károly’s Olympic dream could not be fulfilled for quite some time as two Olympic Games were cancelled due to world war. In 1948 Olympic Games were held in London. Károly was chosen to represent Hungary in pistol shooting event. Károly never felt he was beneath any individual. He practiced, he participated, he WON. Shooting with his left hand. Imagine being a gold medal favorite, losing your shooting hand in an accident, yet picking yourself up from a shattered mess, training your left hand to shoot as well (or better), and going on to win the Olympic gold medal.
Four years later, in Helsinki Olympics. Károly won another gold medal in shooting event. Shooting with his left hand. This is the stuff champions are made of. We all have faced failures in life, we feel defeated, crushed, beaten. The next time you feel that think of Károly. Don’t cry and say why me? Don’t worry about what you’ve lost, focus on what you still have. No hand grenade can blast your will, mental strength and determination.
Don’t lose yourself to self pity. get up quickly and do it now. Many great speakers of the world have confirmed this fact. In words of Confucius “ Our greatest glory is not in never falling, but in rising every time we fall “. Károly was out practicing in a month after the accident. He never let self-pity to take control.
Prakash Iyer mentioned in his book The Habit of winning Winning a gold medal in Olympic is less about the hand, more about the mind. Life is like that. Winning is less about skills, more about attitude“.

பேரறிஞர் அண்ணாதுரை

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பேரறிஞர் அண்ணாதுரை


தமிழ். ஆங்கில, இந்தி என மும்மொழியிலும் முத்தாய்ப்பாக பேசுவதிலும், எழுதுவதிலும் முற்போக்கு சீர்திருத்த வாதியானவர்தான் காஞ்சிபுரம் தந்த தங்க தமிழன் பேரறிஞர் கா.ந. அண்ணாதுரை.
மும்மொழி வித்தகரான இவர் பல முற்போக்கு சீர்திருத்த நாடகங்களையும் எழுதியும், இயக்கியும் அதில் ஒரு பாத்திரமாக நடித்தும் பெருமை சேர்த்தவர். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனங்கள் எழுதியதன் மூலம் திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியும் வந்தார்.
இளமைக் காலம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் 15, 1909 ஆம் ஆண்டு நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பமான திரு. நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் மகனாப் பிறந்தார்.
இவரின் தந்தை ஒருநெசவாளர். தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளர்ந்து வந்தார். மாண வப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம் புரிந்துகொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமக்கையின் பேரக் குழந்தைகளை த்ததெடுத்து வளர்த்தனர்.
பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வந்த அண்ணாதுரை குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராகச் சில காலம் பணிபுரிந்தார்.
கல்வி: 1934 இல் இளங்கலாமானி மேதகைமை (ஆனர்ஸ்) மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியில் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.
ஆசிரியர் பணி:
பட்டப் படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆறுமாத காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். பிறகு பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியர் பணியை இடைநிறுத்தி பத்திரிக்கைத் துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
பத்திரிக்கை பணி
1937 முதல் 1940 வரை தந்தை பெரியார் அவர்களின் இதழ்களான குடியரசு, விடுதலை, பகுத்தறிவு போன்ற பத்திரிக்கைகளில் துணை ஆசிரியராகப் பணி புரிந்தார். அந்த காலகட்டங்களில் க்லகத்தா காய்ச்சல், ரிப்பன் மண்பத்து மகான்கள், ஓமன் கடற்கரையிலே போன்ற சிறப்புமிக்க கட்டுரைகளை எழுதினார். அப்போது நக்கீரன், பரதன், வீரர் எனும் புனைப் பெயர்களில் பல கட்டுரைகளையும் எழுதினார்.
அரசியலில் நுழைவு: அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 இல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பொறுப் பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் தொடங்கினார்.(திராவிட நாடு தனி கோரிக்கையை வலியுறுத்தி துவங்கப்பட்டது) 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்.
பெரியாருடன் கருத்து வேறுபாடும் திமுக உருவாக்கமும்:
பெரியாரின் தனித்திராவிட நாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளைவரான மணியம்மையாரை பெரியார் மணம் பிரிந்துகொண்டதால் கருத்து வேறுபாடு கொண்டு, அண்ணாதுரை மற்றும் பெரியாரின் அண்ணன் மகனும் பெரியாரின் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக் கட்சி துவங்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி (17.10.1949) அன்று அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கெதிராகப் பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலக்கட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்க தொடங்கினார். இருதியில் 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களின் ஆதரவையும் ஆவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிவிதமான செல்வாக்கை பெற்றது.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
அறிஞர் அண்ணாதுரை அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும், அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான பண்பாடுகளே இவை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை தனி்ப்பட்டு ஒர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதப்படுகின்றது.
கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் அரசிலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் அளித்திடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல் எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்னை பொது வாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும் என்பது அண்ணாவின் கொள்கையாகும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம்
இந்தியா 1950 இல் அரசிலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு பின்பு இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தன் அங்கீகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1965 இல் அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 27, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை முதல் தளபதியாகப் பொறுப்பேற்று நான்கு மாதம் சிறை தண்டனைப் பெற்றார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நடராசன் - தாளமுத்து இருவரின் உயிரிழப்பிற்குப் பிறகு இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரண்டது. அவ்வாண்டின் இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர் 1940 இல் மதராசு ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இநதிக் கல்வியை விலக்கினார்.
இந்தியாவின் ஆட்சி மொழியக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை
இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது. அது பெரும்பாண்மை மக்களால் பேசப்படுவதால், ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பாண்மையாக இருப்பது எலி தானே அல்லது ஏன் மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் பெரும்பாண்மை பறவை காகம் தானே?
தமிழ்மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும் வரை எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.
இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை தாய் மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும், இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது என்றார்.
மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது.
சட்டப்பேரவையில் அண்ணாதுரை
சட்டப்பேரவையில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், ஆளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்ட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.
* மே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர். நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்கு கொண்டது.
* 1957 இல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டப்பேரவை தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது. அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டப்பேரவைக்குள் நுழைந்தது.
* 1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரஸை அடுத்து உருவெடுத்திருந்துது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியை தழுவினார். பின்பு மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு அண்ணாதுரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
* 1967 இல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார்.
* 1962 இல் சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சியனரே வியக்கும் விதமாக மிக சாதுர்யமாக பதில் அளித்தார். பேரவையில் அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு  அண்ணாதுரை அவர்கள் நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.
மொழிப்புலமை
ஒருமுறை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிசோதிப்பதற்காக அவரிடம், "ஏனென்றால்" என்ற வார்த்தையை மூன்று முறை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா? என்ற கேட்டனர். அதற்கு அண்ணாதுரை அவர்கள்,
"No Sentence can begin with because, because, because is a conjunction" அதாவது எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது. அவ்வார்த்தையை ஏனென்றால், ஏனென்றால், ஏனென்றால் என்பது ஓர் இணைப்புச் சொல் என்றார்.
இலக்கியப் பங்களிப்புகள்
அண்ணாதுரை மிகச்சிறந்த சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக அடுக்கு மொழிகளுடன்., மிக நாகரிகமான முறையில் அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறனும், எழுத்தாற்றலும் பெற்றவர்.
திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி(1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இதில் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி(1949) மற்றும் ஓர் இரவு போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன.
இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்க பலமாக விளங்கியவர்கள் டி.வி.நாராயணசாமி, கே.ஆர்.ராமசாமி, என.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்.
மறைவு
அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பிப்ரவரி, 1969 இல் மரணமடைந்தார். அவர் பொடி நுகரும் பழக்கம் உடையவர் இதனால் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி, இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணாவின் பொன்மொழிகள்
"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்"
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சானை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல, நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.
சட்டம் ஓர் இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு; அந்த விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை. (வேலைக்காரி நாடகத்தில்-1945)
அண்ணாதுரையின் முதல் படைப்புகள்
முதல் கட்டுரை - தமிழில் மகளிர் கோட்டம் - 19.03.1931
முதல் கட்டுரை - ஆங்கிலத்தில் MOSCOW mobparade - 1932
முதல் சிறுகதை - கொக்கரக்கோ - 11.02.1934
முதல் கவிதை - காங்கிரஸ் ஊழல் - 09.12.1937
முதல் கடிதம் - பகிரங்க்க் கடிதம் 02.09.1938
முதல் குறும் புதினம் - கோமளத்தின் கோபம் - 07.1939
முதல் புதினம் - வீங்கிய உதடு - 23.03.1940
முதல் நாடகம் - சந்திரோதயம் - 05.06.1943
அண்ணாதுரை புனைப்பெயர்கள்
செளமியன், பரதன், நக்கீரன், வீரன், குறம்போன், துறை, வீனஸ், சமதர்மன், ஒற்றன், நீலன், ஆணி, சம்மட்டி, காலன், பேகன், வழிப்பேோக்கன், சிறைபுகுந்தோன், குறிப்போன், கொழு, குயில், கீரதர்.
நினைவுச் சின்னங்கள்
* தமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது.
* அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
* சென்னை மெரினா கடற்கரையில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
* எம். ஜி. ராமச்சந்திரன் திமுகவிலிருந்து பிரிந்து தனிகட்சி தொடங்கியபோது அதற்கு அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். சென்னையில் உள்ள திமுக தலைமைச் செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன.
* வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம்  திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா கலையரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
* 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
* 2010 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.

Friday, December 20, 2013

மனம் எனும் அற்புத சக்தி 1

மனம் எனும் அற்புத சக்தி 1
                                         மனிதன் நினைத்தாள் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் பல வெற்றியாளர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம்  ,படித்திருப்போம் ஆனாலும் நம் மனம் பல நேரங்களில் இதை ஏற்றுக்க கொள்வதில்லை ,வாழ்க்கையில் இதைப் பயன்படுத்துவது இல்லை, நாம் அதை ஏற்றுக் கொண்டாலும் நம்முடன் இருக்கும் சிலர் அல்லது நமது சமூகம் நம்மை எதிர்மறையாக பேசி நம்முடைய நம்பிக்கையைக்  குறைத்து விடுகின்றனர் .இப்படிப் பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்காக மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி காண்பது,எதிர்மயையாக பேசுபவர்களை எவ்வாறு சமாளிப்பது , வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி கொண்டனர் என்பதை வரும் பதிவுகளில் காண்போம்  ,
     உங்களால் முடியும் உங்களால் முடியாது என்று நீங்கள் எதை எண்ணினாலும் இரண்டும் சரிதான் .இது ஹென்றி போர்ட் அவர்களின் அனுபவ வார்த்தைகள் .

Wednesday, December 18, 2013

சச்சின் ஒரு சகாப்தம்

22 கஜங்கள், 24 ஆண்டுகள், மறக்க முடியாத தடங்கள் 
இந்திய கிரிக்கெட் அணி 1983இல் உலகக் கோப்பையை வென்றது. அதுவரை சோப்ளாங்கியாக இருந்த அணி உலக கிரிக்கெட் அரங்கில் முதலிடம் பிடித்ததை யாராலும் நம்ப முடியவில்லை. அதன்பிறகு இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் பெருகினார்கள். ஆனால் இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பும் பின்னரும் இந்தியாவில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்களே ஒழிய அது மிகச் சிறந்த அணியாக இருந்ததில்லை.

80களில் சுனில் காவஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், திலிப் வெங்சர்க்கார் போன்ற மிகச் சிறந்த மட்டையாளர்களும் கபில்தேவ், மொஹீந்தர் அமர்நாத், மனோஜ் பிரபாகர் போன்ற ஆல்ரவுண்டர்களும் இருந்தார்கள். சந்தீப் பாட்டீல், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றவர்கள் இந்தியர்களுக்குப் பழக்கமில்லாத அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் அரங்கில் காட்டிப் பரபரப்பு ஏற்படுத்தினார்கள். முகமது அசாருதீன், நவ்ஜோத் சிங் சித்து போன்ற நேர்த்தியான மட்டையாளர்கள் புதிதாக இணைந்தார்கள். இருந்தாலும் இந்திய அணி அதிக வெற்றிகளைக் குவிக்கும் அணியாக இருக்கவில்லை. உலக அரங்கில் மதிப்புப் பெற்ற அணியாகவும் இருக்கவில்லை. காரணம் உலக அரங்கில் சவால்விடும் அளவுக்கு அசாத்தியமான திறமையும் போராடும் குணமும் இவர்கள் யாரிடமும் இணைந்திருக்கவில்லை. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகளை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொள்ளத் திராணியற்ற அணியாகவே இந்திய அணி இருந்தது.

இந்தச் சூழலில்தான் 16 வயதுச் சிறுவன் ஒருவன் அணிக்குள் வந்தான். மும்பையில் பள்ளிப் போட்டிகளிலும் ரஞ்சி கோப்பையிலும் அவன் அடித்த ஓட்டங்கள் அவனை இந்திய அணிக்கு ஆடவைத்தன. 1989 நவம்பர் 15 அன்று பாகிஸ்தான் அணியை அதன் மண்ணில் எதிர்கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்தான். அவன் பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.

அந்தப் பையன் இன்று கிரிக்கெட் களத்தில் இல்லை. எத்தனையோ பேர் வந்துபோன களம்தான் அது. ஆனால் இவனது வருகையும் விடைபெறலும் சாதாரணமானதாக இல்லை. அந்தச் சிறுவன் உலகப் புகழ்பெற்ற மட்டையாளனாக, கோடிக்கணக்கான ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுளாக ஆராதிக்கப்படுபவனாக, நேற்றைய சாதனையாளர்களும் சமகால வீரர்களும் வியந்து பார்க்கும் நாயகனாக வளர்ந்து நிற்கிறான். தேசமே அவனுக்குக் கண்ணீருடன் பிரியாவிடை தருகிறது. ஊடகங்கள் அவன் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றன. வீடுகளின் வரவேற்பறைகளும் பொது இடங்களும் அவனைப் பற்றிய உரையாடல் களமாக மாறியிருக்கின்றன.

இந்த 24 வருட இடைவெளியில் சச்சின் செய்த சாதனைகளையும் கடந்து வந்த சோதனைகளையும் வைத்துத் தனிப் புத்தகமே எழுதலாம். ஆனால் 24 வருடங்கள் முன்னணி வீரனாக, நம்பிக்கை நட்சத்திரமாக, கிரிக்கெட்டில் ஒளி குன்றாச் சூரியனாக அவர் விளங்கியமைக்குச் சாதனைகளை மீறி வேறு பல காரணங்கள் இருக்கின்றன.


இந்தியாவை எள்ளலுடன் எதிர்கொண்ட அணிகள் சச்சின் டெண்டுல்கரை மட்டும் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் களத்தில் இருக்கும் வரை இந்த அணிகளில் உள்ள அனைவரும் தங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்திக் கவனத்தைச் சிதறவிடாமல் விளையாடுவார்கள். கார்ட்னி வால்ஷ், கர்ட்லி ஆம்ப்ரோஸ், ஆலன் டொனால்ட், வாசிம் அக்ரம். வக்கார் யூனுஸ், க்லென் மெக்ரா, ஷேன் வார்ன், முத்தையா முரளீதரன், டேல் ஸ்டெயின் ஆகிய உலகப் பெரும் பந்து வீச்சாளர்கள் சச்சினுக்குப் பந்து வீசும்போது மட்டும் மிகக் கவனமாகச் செயல்படுவார்கள். ஏனெனில் மிகச் சிறந்த பந்துகளில்கூட அனாயசமாக ஓட்டமெடுக்கும் வித்தையில் சச்சின் தேர்ந்திருந்தார். இது மோடி மஸ்தான் வித்தையல்ல. ஒரு நாளின் ஏழு மணிநேரங்களைப் பயிற்சியில் செலவழித்த அர்ப்பணிப்புணர்வுக்குக் கிடைத்த பரிசு.

ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விளையாட்டிலாவது இந்தியாவால் ஆதிக்கம் செலுத்த முடிந்ததற்கு முக்கியமான காரணம் சச்சின். 90களில் பொருளாதார வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் இருந்த இந்தியர்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்கத்தினருக்கு இதனால் கிடைத்த மனத்திருப்தி சச்சினை அவர்களது ஆதர்ச நாயகனாக்கியது. சச்சின் ஆட்டமிழந்தால் இந்திய அணி தோற்றுவிடும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் மட்டுமல்ல, எதிரணிகளிடமும் பல ஆண்டுகளுக்கு நிலவியது. வெற்றிபெறுவதை விட சச்சின் விக்கெட்டை எடுப்பதை எதிரணியினர் அதிகமாகக் கொண்டாடுவார்கள். சச்சின் ஆட்டமிழந்த மாத்திரத்தில் பல வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி அணைக்கப்படும். மறுநாள் காலைதான் போட்டியின் முடிவைத் தெரிந்துகொள்வார்கள். இந்தியா வெற்றிபெற்றது என்ற செய்தி மிக அரிதாகவே இடம்பெறும்.

சச்சின் ஆட்டத்தில் பல்வேறு நுணுக்கங்களைப் புகுத்தினார். வெறுமனே நிற்பது அல்ல கிரிக்கெட் என்பதை நிறுவினார். நல்ல அளவில் வரும் பந்தை எப்படி எதிர்கொள்வது என்பதிலும் முன்னே சென்று ஆடும் தடுப்பாட்டத்தை எப்படி ஓட்டம் எடுக்கும் உத்தியாகப் பயன்படுத்துவது என்பதிலும் துடுப்பாட்ட மட்டைவீச்சில் புது இலக்கணம் வகுத்தார். பின்காலில் சென்று அவர் ஆடும் அனாயாசமான கவர் ட்ரைவும் தனிப்பாணியிலான ஸ்ட்ரெய்ட் ட்ரைவும் கிரிக்கெட்டின் மிக அழகான காட்சிகளில் ஒன்றாக நிலைபெற்றுள்ளன. பெடல் ஸ்வீப் போன்ற சில ஷாட்கள், லெக் ஸ்பின்னரை இறங்கி வந்து இன்சைட் அவுட் ஷாட் அல்லது லாஃப்ட்ட் ஷாட் மூலம் இவர் எதிர்கொண்ட விதம் பிற மட்டையாளர்களுக்குப் பாடமாக விளங்கின. யாரும் ஆடாதபோதும் சச்சின் தொடர்ந்து நன்றாக ஆடினார். தொண்ணூறுகள் முழுவதும் இந்த நிலை நீடித்தது. இந்தக் குணத்தின் அடையாளமாக 1997 ஷார்ஜா போட்டிகளையும் 1999 சென்னை போட்டியையும் சொல்லலாம்.

புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இந்திய அணி வலுப்பெறத் தொடங்கியது. ஆனால் அப்போதும் அந்நிய மண்ணில் பெரிதாகச் சாதிக்காத அணியாகவே இருந்தது. தென் ஆப்ரிக்காவில் நடந்த 2003 உலகக் கோப்பையில் மிகச் சாதாரணமான அணியாக ஆடத் தொடங்கியது. ஆனால் இறுதிப் போட்டிவரை முன்னேறியது. அதில் சச்சினின் சதங்களும் அரை சதங்களும் முக்கியப் பங்காற்றின.

சச்சின் பல மோசமான உடல் காயங்களைச் சந்தித்திருக்கிறார். அவற்றிலிருந்து போராடி மீண்டு வந்தார். அந்தக் காயங்களால் அவரது ஆட்டத்திறன் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. சந்தர்ப்பத்துக்கேற்பத் தன் ஆட்டத்தைத் தகவமைத்துக்கொள்ளும் திறன் அவருக்கு இருந்தது.

2007 உலகக் கோப்பையில் நம்பிக்கையுடன் களம் கண்ட இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. அப்போதுதான் சச்சினுடைய கிரிக்கெட் வாழ்வின் அந்திமக் காலம் தொடங்கிவிட்டதாகப் பலர் கருத ஆரம்பித்தார்கள். ஆனால் சச்சின் இதிலிருந்தும் மீண்டுவந்தார். 2007இல் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் நடந்த டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக ஆடினார்.

மீண்டும் 2009, 2010ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கத் தொடங்கினார் சச்சின். மீண்டும் ஓய்வுபெற வேண்டும் என்ற குரல்கள் எழும்பின. ஆனால் 2009இல் ஆஸ்திரேலியாவுடன் அடித்த அதிவேக 175ஐக் கொண்டாடினார்கள் ரசிகர்கள். 2010இல் தென் ஆப்ரிக்காவுடனான ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துத் தன் ஆட்டத்துக்கு வயதாகவில்லை என்று நிரூபித்தார் சச்சின்.

2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றதிலும் சச்சினுக்கு முக்கியமான பங்கு இருந்தது. தொடரில் மிக அதிக ஓட்டங்கள் குவித்த முதல் இரண்டு வீரர்களில் ஒருவர் சச்சின். அப்போது அவருக்கு 38 வயது.

2011 உலகக் கோப்பைக்குப் பிறகு சச்சினின் ஆட்டத்தில் தடுமாற்றம் தெரிந்தது. 100ஆவது சதத்தை நோக்கிய பயணம் மிகக் கடுமையானதாக இருந்தது. அவ்வப்போது அரை சதங்கள் எடுத்தார். சில போட்டிகளில் 80களிலும் 90களிலும் ஆட்டமிழந்தார். வெற்றிக்குப் பெரிதாகப் பங்களிக்க முடியவில்லை. கடைசியாக வங்காளதேச அணியுடன்தான் 100ஆவது சதத்தை அவரால் அடிக்க முடிந்தது.

அதன்பின் சச்சின் பெரிய சாதனை எதுவும் செய்யவில்லை. ஐம்பதுகளை நூறாக மாற்றவும் நெடுநேரம் நின்று ஆடவும் ஆட்ட நுணுக்கத்துடன் உடல்திறன் உச்சத்தில் இருப்பதும் முக்கியம். 38 வயதுக்குப் பிறகு அதை எதிர்பார்க்க முடியாது. நடுவர்களின் தவறுகளுக்கும் அவர் பலியாகிக்கொண்டிருந்தார். ஆனால் எப்போது வேண்டுமானாலும் பழைய திறனுடன் ஆடிவிடுவார் என நினைக்கும் விதத்தில்தான் சச்சின் அடிக்கும் ஷாட்கள் இருந்தன. இந்த ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் கடைசி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராகவும் ஆடிய ஆட்டங்களே இதற்குச் சான்று.

மும்பை வான்கடே மைதானத்தில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தன் கடைசி இன்னிங்க்ஸை விளையாடினார். வரலாறு காணாத அந்த எதிர்பார்ப்புகளின் அழுத்தம் அவர் ஆட்டத்தில் தெரியவில்லை. சதம் அடிக்கவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தாலும் 74 ஓட்டங்கள் எடுத்த அந்த ஆட்டம் தடுமாற்றங்கள் அற்றதாக இருந்தது. இன்னும் சிறிது காலம் இவர் ஆடக் கூடாதா என்று அனைவரையும் ஏங்க வைத்தது.

ஆடுகளத்தை தொட்டுக் கும்பிட்டுவிட்டு மைதானத்திலிருந்து வெளியேறும்போது அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. தன் வாழ்வின் பகுதியாகவே மாறிவிட்ட கிரிக்கெட் இல்லாமல் எப்படி வாழப்போகிறோம் என்ற அச்சத்தின் கண்ணீர் அது. அவர் எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட்டை நேசித்தவர். எனவேதான் அவரால் கடைசிப் போட்டிக்குக்கூட முழு ஈடுபாட்டுடன் பயிற்சி எடுக்க முடிந்தது. கடைசிப் போட்டியில் தவறான ஷாட் ஆடி ஆட்டமிழந்ததைப் பற்றித் தன் குருவுடன் விவாதிக்க முடிந்தது.

விஸ்டன் இந்தியா என்னும் அமைப்பு சச்சினைப் பற்றி ஒரு சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறது. அதில் புள்ளிவிவரம் சார்ந்த ஒரு கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. பல்வேறு கோணங்களில் சச்சினின் ஆட்டத்தை அலசும் அட்டவணைகளைப் பார்த்தாலே சச்சின் தன் சமகாலத்தவர்களைவிட முன்னணியில் இருந்ததைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அவரது மிகப் பெரிய சாதனை புள்ளிவிவரங்களின் கணக்குகளுக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும்போதும் மாபெரும் நெருக்கடியைச் சுமந்து ஆட வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தாண்டி அவர் இத்தனை சாதனைகளைச் செய்திருக்கிறார் என்பதுதான் மிகப் பெரிய சாதனை. இத்தனை கோடிப் பேரின் நம்பிக்கை நட்சத்திரம், இளம் ஆட்டக்காரர்களின் ஆதர்ச நாயகன், எதிரணிகளின் முதன்மை இலக்கு. இவையெல்லாம் புள்ளிவிவரங்களில் தெரியாது. அவர் அவுட் ஆகும்போது சொந்த துக்கமாக அதை மக்கள் கருதுவதும் சிறப்பாக ஆடும்போது தாங்களே சாதித்ததாகக் கருதுவதும் வேறு யாருக்கும் நடக்காத அதிசயங்கள். இந்தத் தன்மைகள்தாம் சச்சினை கிரிக்கெட் வரலாற்றிலேயே உலகில் தனித்துக் காட்டுகின்றன.

சச்சின் ஓய்வுபெறும் போட்டியின் கடைசி நாள் அன்று அவருக்கு பாரத ரத்னா விருதை இந்திய அரசு அறிவித்தது. இதில் அரசியல் இருப்பதாகச் சிலர் விமர்சித்தார்கள். பாரத ரத்னாவுக்கு அவர் தகுதியானவர்தானா என்றும் சிலர் விவாதித்தார்கள். பாரத ரத்னா விருது பற்றி விவாதிக்கலாம். ஆனால் அவர் பாரதத்தின் மதிப்புமிக்க ரத்தினம் என்பதில் விவாதத்துக்கே இடமில்லை. 22 கஜங்களும் 24 ஆண்டுகளும் அதற்குச் சாட்சியாக இருக்கின்றன.

எஸ்.கோபாலகிருஷ்ணன்: இளம் பத்திரிகையாளர்.
மின்அஞ்சல்: gopalasankar87@gmail.com


சச்சினின் போதாமைகள்

டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் வெற்றியை நிர்ணயிக்கும் ஆட்டத்தை அவர் விளையாடியதில்லை என்ற விமர்சனம் சச்சின்மீது வைக்கப்படுவதுண்டு. அவருடைய முதல் சதமே நான்காவது இன்னிங்சில் இங்கிலாந்தில் அடித்ததுதான். ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் அடித்த சதமும் நான்காவது இன்னிங்ஸ் சதம்தான். சென்னையில் 2008இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் சச்சின் அடித்த 103 ரன்கள் இந்தியாவை வெற்றிபெறவைத்தன. பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், திராவிட், லட்சுமணன் போன்றோர் அதுபோன்ற இன்னிங்ஸ்களை சச்சினை விடவும் கூடுதலாக ஆடியிருக்கிறார்கள். ஆனால் நான்காவது இன்னிங்ஸில் சச்சின் சிறப்பாக ஆடியும் பிறர் ஒத்துழைப்பு இல்லாமல் அணி தோற்றதும் உண்டு. டெஸ்ட் போட்டியில் ஒற்றை மட்டையாளரால் அணி வெற்றிபெறுவது மிக அரிதான நிகழ்வு.


விவியன் ரிச்சர்ட்ஸும் ஜெஃப்ரி பாய்காட்டும் சச்சினைப் பற்றிச் சொல்வதைப் படித்தாலே சச்சினுக்கு எதிரான விமர்சனங்களின் போதாமை புரிந்துவிடும். யாருமே 100 சதவீதம் சரியாக இருக்க முடியாது என்பதையும் மனதில் கொண்டு சச்சினை மதிப்பிட வேண்டும். சச்சின் 99.5 சதவீதம் முழுமையான மட்டையாளர் என்கிறார் ரிச்சர்ட்ஸ்.

எல்லாவற்றையும் ஒருவரிடமே எதிர்பார்ப்பதும் அவரது மேதமைக்கான சான்று என்றுதான் சொல்ல வேண்டும்

Tuesday, December 17, 2013

தன்னம்பிக்கை கதைகள்-7

பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள்
===========================
தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச் 
சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான். 

எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான்.

பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான்.

மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும் '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.

நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.

முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது.

அடுத்தது,பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.

இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.


பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே! மூப்பு, பிணி,சாவு, சூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!

பிறவியிலோ, விபத்திலோ உறுப்புகளை இழந்தவர், அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர், கடைசிமுறையீடும் தோற்று, தூக்குமேடை ஏறவேண்டியவர், புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்- இவர்கள் மட்டுமன்றி, ஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய சூழலில் உள்ளவர், மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன் வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் - இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..

''உனக்கு ஏழரை நாட்டுச்சனி. ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை'' என்றான் சோதிடன். பாதிக்கப்பட்டவன் எப்படியெனக்கேட்டதற்கு,'' ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும். மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது'' என்றானாம். துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.

தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.

1. 43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.

2.விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.

3.தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல், கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.

4.கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்து, தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.

5. பிரிட்டனில் 21 வயது இளைஞர் ஒருவர் , முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும், ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும், அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.

பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும் அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும் வளர்த்துக்கொண்டால் இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.

தன்னம்பிக்கை கதைகள்-6

காபி கோப்பை
==============
ஒருவர் தனது நண்பர்களுக்கு விருந்து அளித்தார்.விருந்தின் முடிவில் ஒரு கேன் நிறைய காபி கொண்டு வந்து வைக்கப்பட்டது.ஒரு தட்டில் சாதாரண பிளாஸ்டிக் கப்பிலிருந்து கண்ணாடிக் கோப்பை,பீங்கான் கோப்பை, அலங்காரக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள் இருந்தன.விருந்துக்கு வந்த அனைவரும் விலை உயர்ந்த கோப்பைகளை எடுக்கவே முயன்றனர்.விலை குறைந்த பிளாஸ்டிக் கோப்பைகளை யாரும் சீண்டக் கூட இல்லை.விருந்தளித்தவர் சொன்னார்''எதிலும் சிறப்பையே நாடுவது மனித இயல்பே.ஆனால் உங்களது இப்போதைய தேவை காபிக் கோப்பைகள் அல்ல.நல்ல காபிதான்.எந்தக் கோப்பையில் குடித்தாலும் நீங்கள் குடிக்கப் போவது இங்குள்ள ஒரே தரக் காப்பியைத்தான்.
நம் வாழ்க்கையும் அந்தக் காபியைப் போன்றுதான் உள்ளது.அந்தக் காபியை அருந்த உதவும் கோப்பைதான் உங்கள் வேலை,சமூக அந்தஸ்து,செல்வச் செழிப்பு எல்லாம்.நீங்கள் உங்கள் கோப்பைகளில் மட்டும் கவனம் செலுத்தி.காபியின் உண்மையான ருசியை ரசிக்கத் தவறி விடுகிறீர்கள். காபியின் ருசியை நாவிற்கும் நாசிக்கும் ஏற்றுங்கள்,நண்பர்களே!''

தன்னம்பிக்கை கதைகள்-5

எவ்வளவு வெயிட்?
-----------------------------
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.

மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

# இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.

தன்னம்பிக்கை கதைகள்-4

பயம்! பயம்! பயம்!
--------------------------
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.

தன்னம்பிக்கை கதைகள்,

ஒரு தத்துவஞானி ஆற்றைக் கடப்பதற்காகப் படகில் ஏறினார். படகுக்காரனைப் பார்த்து, ”உனக்குப் பூகோளம் தெரீயுமா?” என்று கேட்டார். “எனக்குப் படகு ஓட்டத்தான் தெரியும், பூகோளம் எல்லாம் தெரியாது” என்றான் படகுக்காரன். வாழ்க்கை ஒரு ரூபாய் என்றால், அதில் கால் ரூபாயை நீ இழந்துவிட்டதாக அர்த்தம் என்றார் தத்துவஞானி. சற்றுத் தூரம் போனவுடன், “சரித்திரம் தெரியுமா” என்று கேட்டார். ” அதுவும் எனக்குத் தெரியாது” என்றான் படகுக்காரன். “அரை ரூபாயை இழந்துவிட்டாய்” என்றார் அவர். பிறகு அவனைப் பார்த்து, “விஞ்ஞானம் தெரியுமா?” எனக் கேட்டார். “அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது அய்யா, எனக்கு படகு ஓட்ட மட்டும் தான் தெரியும்” என்றான் படகுக்காரன். “முக்கால் ரூபாயை இழந்துவிட்டாய்” என்றார் அவர். அப்பொழுது திடீரென்று ஆற்றில் சுழல் ஏற்பட்டு படகு கவிழும் நிலை ஏற்பட்டது.. “சாமி, உங்களுக்கு நீந்தத் தெரியுமா?” என்று படகுக்காரன் கேட்டான். “தெரியாது” என்றார் அந்த தத்துவ ஞானி. “இப்பொழுது உங்கள் உயிரை அல்லவா நீங்கள், இழக்கப் போகிறீர்கள்”, எனக் கூறிய படகுக்காரன் நீரில் குதித்துக் கரை சேர்ந்தான். தத்துவஞானியோ நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிர் துறந்தார்.. நீதி> தத்துவம் உயிரைக் காப்பாத்தாது…!!
--இணையத்திலிருந்து

தன்னம்பிக்கை கதைகள்-2

காது கேட்காத தவளை

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.

அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.

உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.

சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.

உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.

ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.

பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தவளை "எனக்குக் காது கேட்காது " என்றது.

நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.

- நன்றி தமிழால் இணைவோம்

தன்னம்பிக்கை கதைகள்

வறுமை
------------

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.

வைகோ வை பற்றி பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்:

வைகோ வை பற்றி பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்:

மிழின போராளி வைகோ வை பற்றி பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்:
1. என்னோடு இருக்கும் 200 MPகளுக்கு சமமானவர் வைகோ - இந்திரா காந்தி

2.வைகோ வை போன்ற நேர்மையான தலைவர்களின் கைகளில் தான் எதிர்கால அரசியல் இருக்கிறது - வி பி சிங்

3.வைகோ வை போன்ற போராட்டட குணம் கொண்டவர்களை நான் என் வாழ் நாளில் பார்த்தது இல்லை -ராஜீவ் காந்தி

4.எந்த மிரட்டலுக்கும் அடிபணியாத லட்சியவாதி வைகோ -நரசிம்ம ராவ்

5.வைகோ வை போன்ற திறமைசாலிகள் மத்திய அமைச்சரவையை அலங்கரிக்க வேண்டும் -முரளி தியோரா

6.அரசியலை மக்கள் பணிக்கான தளமாக பார்ப்பவர் வைகோ -பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங்க் பாதல்

7.வைகோ வை என் நண்பனாக பெற்றது நான் செய்த பாக்கியம் -உமர் அபுல்லாஹ்

8.என் 70 ஆண்டு கால பொது வாழ்கையில் நான் சந்தித்த மிக சில லட்சியவாதிகளில் வைகோ முக்கியமானவர்- ஹர்கிசன் சிங்க் சுர்ஜித்

9.பதவி வெறி பிடித்த அரசியல் வாதிகளுள் வைகோ மாறுபட்ட கொள்கைவாதி -சோம்நாத் சட்டர்ஜி

10.இந்திய வில் கொள்கை வலி அரசியலை முநேடுக்கும் அரசியல் தலைவர்களில் வைகோ வும் ஒருவர் அவரை என் மகனாகவே கருதுகிறேன் -அடல் பிகாரி வாஜ்பாய்

11.வைகோ வை போன்ற தலைவரை பெற்றதற்காக தமிழ் நாடு பெருமை கொள்ள வேண்டும் ,என்னை ஒவ்வொரு முறை சந்தித்த போதும் மக்கள் பிரச்னை குறித்தே கோரிக்கை வைப்பார் ,i salute vaiko -பிரதமர் மன்மோகன் சிங்க்

12.விலை போகாத போராளி வைகோ -அத்வானி

13.அண்ணா வின் கொள்கை விளக்கை ஏற்ற வந்த அன்பு தம்பி வைகோ -கருணாநிதி

வைகோ வின் மீது எனக்கு அன்பும் நன் மதிப்பும் எப்போதும் உண்டு -முதல்வர் ஜெயலலிதா

14.பெரியாரின் உண்மையான வழிதோன்றல் வைகோ -தமிழருவி மணியன்

15.முழுமையான தமிழ் இலக்கியங்களை கற்ற ஒரே அரசியல் தலைவர் வைகோ தான் -நெல்லை கண்ணன்

16.என் இருதய சிகிசைக்கு எல்லோரும் கை விட்ட பின்பு தன சொந்த பணத்தை குடுத்து என் உயிரை காபற்றியவர் வைகோ ,என் இதயம் சாகும் வரை வைகோ வைகோ என்று தான் துடிக்கும் -நடிகர் எஸ் எஸ் சந்திரன்

17.வைகோ ஒருவரை தான் எதிர்கால நம்பிக்கையாக பார்கிறேன் -நடிகர் மணிவண்ணன்

18.வைகோ எந்த கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கான போராட்டங்களில் அவர் பின் வாங்கியதே இல்லை .அவர் உண்மையான ,நேர்மையான தலைவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து
இல்லை .ஒரு நல்ல தலைவர் .நமக்கான மாற்று அரசியலை முன்யேடுக்கும் திறன் அவரிடம் இருக்கிறது என்று நம்புகிறேன்

-கவிஞர் தாமரை

19.வைகோ அதிகாரத்துக்கு வரும் சமயம் தான் தமிழ் இனத்தின் இழி நிலை போக்க படும் -கொளத்தூர் மணி

20.வைகோ தமிழர்களுக்கு கிடைத்த வரபிரசாதம் -பழ .நெடுமாறன்

21.பெரியாருக்கு பின் நான் ஏற்று கொண்ட ஒரே தலைவர் வைகோ தான் -பெரியார்தாசன்

22.எங்களிடம் இருக்கும் ஆயுத குவியலுக்கு நிகரானவர் வைகோ -தமிழ் ஈழ தேசிய தலைவர்

23.என்னை பாதித்த குருஞ்சிமலர் நாவலின் கதாநாயகன் அரவிந்தனை வைகோ வின் ருபத்தில் பார்க்கிறேன் -வலம்புரி ஜான்


இன்னும் ஏராளம் உண்டு............

இந்தியாவின் சொத்து ஜீவா



இந்தியாவின் சொத்து ஜீவா


தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
தீங்கு வரக்கண்டு சிரித்திடுவார் - யாங்காணோம்
துன்பச் சுமைதாங்கி சீவானந்தம் போன்ற
அன்புச் சுமை தாங்கும் ஆள்.
- பாவேந்தர் பாரதிதாசன்
ஜீவா 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் பட்டன்பிள்ளை என்பவருக்கும், உமையம்மாளுக்கும் நான்காவது பிள்ளையாகப் பிறந்தார்.
நாடு முழுவதும் பற்றிப் படர்ந்த சுதந்திரப் போராட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தையும் விட்டுவைக்கவில்லை. நாஞ்சில் நாட்டிலும் பல இடங்களிலும் அந்நிய துணிப் புறக்கணிப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. பூதப்பாண்டிக்கு அருகில் உள்ள திட்டுவினை என்கிற ஊரில் திரிகூடசுந்தரம் பிள்ளை தலைமையில் நடைபெற்ற அந்நிய ஆடை புறக்கணிப்பு கூட்டம் ஜீவாவின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் அந்நியத் துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கூட்டத்துக்குச் சென்றிருந்த ஜீவானந்தம், தான் அணிந்திருந்த அந்நிய ஆடைகளை தீயில் வீசிவிட்டு கோவணத்துடன் வீடு திரும்பினார். அந்த நாள் முதல் ஜீவா கதர் ஆடையையே அணியலானார். அவரது இறுதிக் காலம் வரையில் ஜீவாவின் உடலைக் கதர் ஆடையே அலங்கரித்தது.
 நாஞ்சில் நாட்டுப் பகுதிகளில் கோவில் விழாத் தொடங்கியதும் ஊரின்; நான்கு முக்கிய வீதிகளிலும் ‘தெருமறிச்சான்’ என்ற தடுப்பு வைக்கப்படும். திருவிழா முடியும் வரையில் தீண்டப்படாதவர்களும், தாழ்ந்த சாதிக் காரர்களும் தெருமறிச்சானைத் தாண்டி கோவில் பக்கம் போய் விடக்கூடாது. இப்படிப்பட்ட சு{ழ்நிலையில் ஜீவானந்தம், தனது இளமைப்பருவத்திலேயே தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தனது நண்பரான மண்ணாடி மாணிக்கம் என்பவரை ‘தெருமறிச்சானை’த் தாண்டி ஊருக்குள்ளும், கோயிலுக்குள்ளும் அழைத்துச் சென்றார். ஊராரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தவில்லை ஜீவா. இந்த வகையில் அவர் நாஞ்சில் நாட்டு ஆலயப்பிரவேசப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்று கூறலாம். தமிழக வரலாற்றில் தீண்டாமை ஒழிப்பிற்காக வீட்டை விட்டு வெளியேறிய முதல் சமூக சீர்திருத்தவாதியாவார் ஜீவா.
 ஜீவானந்தம் வீட்டை விட்டு வெளியேறிய காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்திற்கேற்ப 1924 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தலைமையில் கேரளத்தில் வைதீகக் கோட்டையாக இருந்த வைக்கம் நகரில் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதரத் தொண்டர்களைப் போலவே, ஜீவாவும் பல தொல்லைகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது. இத்தோடு ஜீவாவின் பள்ளிப்படிப்பு முற்று பெற்றது.
சுசீந்திரம் தாணுமலையான் ஆலய நுழைவுப்போராட்டம் மேல் சாதிக்காரர்களின் கடுமையான எதிர்ப்பையும், தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் அவமதிக்கப்பட்டனர். ஜீவா கடுமையாகத் தாக்கப்பட்டார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் “வழிவிடுவீர்ஸ வழிவிடுவீர்ஸா’ என்று தான் எழுதிய பாடலைப் பாடிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார். இந்தப் போராட்டத்தின் போது, ஜீவா கடுமையாகத் தாக்கப்பட்டதால், உடம்பில் ஏற்பட்ட காயம் விழுப்புண்ணாக நீடித்தது.
வாயற்ற நாய் கழுதை மலம் தின்னும்
பன்றியும் வழியோடு செல்லலாமாம்
மனிதர்கள் நாம் சென்றிடில் புனிதமற்றுத்தீட்டு
வந்துலகு முழுகிப் போமாம்.
என்று தீண்டாமைக் கொடுமையை சாடுவதுடன், மனிதர்கள் ஏற்றத்தாழ்வின்றி சரிசமமாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் ஜீவா.
நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியில் வ.வே.சு அய்யர் நடத்திய குருகுலத்தில் பார்ப்பன‌ மாணவர்களுக்குத் தனியாகவும்,இதர சாதி மாணவர்களுக்குத் தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. இந்தக் குருகுலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்; உதவியோடு நடத்தப்பட்டது. வர்ணாசிரம முறைப்படி மாணவர்களுக்கு தனித்தனியாக உணவளிப்பதை அறிந்து,தந்தை பெரியார் நேரில் சென்று உண்மையைக் கண்டறிந்தார். இந்த அநியாயத்தை கண்டித்து, எதிர்த்து பெரியார் காங்கிரஸ் கட்சிக்குள் போராட்டம் நடத்தினார். ஜீவாவும் பெரியாருடன் இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்றார். காந்தியின் சமரசம் பெரியாரை ஆத்திரமடையச் செய்தது. ஜீவா இந்த அக்கிரமத்தை எதிர்த்து குருகுலத்தை விட்டு வெளியேறினார். பின்பு, காரைக்குடி சென்று சிராவயல் கிராமத்தில் ஆசிரமத்தை நிறுவினார். இந்த ஆசிரமம் காந்திய நிர்மானத் திட்டத்தை லட்சியமாகக் கொண்டிருந்தது. பல கிராமங்களில் தாழ்த்ப்பட்ட மக்கள் மத்தியில் கல்விப்பணி செய்யப்பட்டதோடு, நூல் நூற்பு நிலையங்களும் தோற்றுவிக்கப்பட்டன. இந்த ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாகப் பாவிக்கப்பட்டனர்.
தமிழ் மொழியின் மீது ஜீவா கொண்ட பற்றும், வடமொழி எதிர்ப்பும் தனது பெயரை ‘உயிர் இன்பன்’ என மாற்ற வைத்தது. ஜீவா, காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அதே சமயத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கு கொண்டிருந்தார்.
‘பெண்களும் - விடுதலையும்’ என்னும் பொருளில் ஜீவா உணர்ச்சி கொப்பளிக்க ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டு வியந்து போன வ.உ.சி , “அஞ்சுபவர்களும், கெஞ்சுபவர்களும் சுதந்திரத்தைப் பெற முடியாது. ஜீவானந்தம் போன்ற சிலர் இருந்தாலே போதும் நாடு விடுதலை பெற்றுவிடும்” என்று கூறிப் பாராட்டினார்.
1927 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காந்தியடிகள், ஜீவா நடத்திக் கொண்டிருந்த ஆசிரமத்துக்கு வந்தார். ஜீவா தன் கையால் நூற்ற பத்தாயிரம் கெஜம் நூலை அவருக்குப் பரிசாக கொடுத்தார். நூலைப் பெற்றுக் கொண்ட மகாத்மா காந்தி ஜீவாவிடம் உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டார். ‘இந்தியா தான் என் சொத்து’ என்று பதில் சொன்னார். மாக்மா காந்தி ,“இல்லை, இல்லை நீங்கள் தான் இந்தியாவின் சொத்து” என்று ஜீவாவின் தேச பக்த உணர்வைப் பாராட்டினார்.
வருணாசிரம கொள்கைப் பற்றி காந்தியிடம் ஜீவா கேள்வி கேட்டார். “குணத்திற்கும் தர்மத்திற்கும் தக்க படி நான்கு வர்ணங்களை நான் சிருஷ்டித்திருக்கிறேன் என்று கீதையின் வாக்கியங்களில் தங்களுக்கு உடன்பாடு உண்டல்லவா” என்று ஜீவா கேட்டபோது காந்தியடிகள் “ஆம்” என்று பதில் சொன்னார்.
“அப்படியானால், சாத்வீகத்தன்மையிலும், நல்நெறி ஒழுக்கத்திலும் சிறந்தவராக விளங்கும் நீங்களும் ஒரு பார்ப்பன‌ர் அல்லவா” பிரமாணனாகப் பிறந்து தீய ஒழுக்கமுடையவன் சு{த்திரன் தானே” என்று ஜீவா கேட்ட போது “இல்லை” என்று மறுத்த காந்தி “நான் ஒரு நல்ல வைசியன் தீய ஓழுக்கமுடைய ஒரு பார்ப்பன‌ன் கெட்ட பார்ப்பன‌ன்” என்று பதில் சொன்ன போது, காந்தியின் கருத்துக்கள், பிற்போக்கானவை, சனாதனத் தன்மை கொண்டவை, வைதீகக் கருத்துக்கள், முற்போக்குப் பார்வை கொண்டதல்ல என்று தெரிந்ததும் ஜீவா மேற்கொண்டு விவாதத்ததைத் தொடரவில்லை.
காரைக்குடி அருகில் உள்ள கோப்பை நாயக்கன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்பதற்கு எதிராக ஜீவா போராட்டம் நடத்தினார். உள்ளூர் வைதீகர்களது கோபத்துக்கு உள்ளாகி கத்திக்குத்துக்கு உள்ளானார். ஜீவாவின், தீவிர அரசியலையும், சுயமரியாதையுப் போக்கையும் பிடிக்காத ஆசிரமத் தலைவர் கும்பலிங்கபிள்ளைக்கும் ஜீவாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, ஆசிரமத்தில் இருந்து பிரிந்து சிராவயல் அருகிலேயே 1929 ஆம் ஆண்டு நாச்சியார்புரம் என்ற கிராமத்தில் “உண்மை விளக்க நிலையம்” என்ற பெயரில் ஓரு ஆசிரமத்தை தோற்றுவித்தார். ஆசிரமத்தின் உயரிய நோக்கங்கள்.
1)வறுமை, பிணி அகற்றுதல் 2) தீண்டாமை ஒழித்தல் 3) மதுப்பழக்கம் ஒழித்தல் 4) ஆதி திராவிட மக்களுக்கு உழைத்தல் 5) பெண்ணுரிமை பேணல் 6) குருட்டுப் பழக்க வழக்கங்களை ஒழித்தல்.
 1930 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் ஜீவா கலந்து கொண்டு, ஞசாதி, மத விவகாரங்களில் மட்டும் நமது சுயமரியாதையை பாதுகாத்துக் கொண்டால்; போதாது. அரசியல் விவகாரங்களிலும் நாம் நமது சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.’ என்று சுயமரியாதை இயக்கத்தையும், தேச விடுதலை இயக்கத்தையும் இணைத்துப் பேசினார்.
 1931 ஆம் ஆண்டு விருது நகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை மாநாட்டில் ஜீவா கலந்து கொண்டு, ‘சமதர்ம தத்துவமும், பொதுவுடைமைக் கொள்கையும் நாட்டில் ஓங்க வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்கிறபடியால் விதி, கடவுள்செயல் என்பன போன்ற எண்ணங்கள் மக்கள் மனதிலிருந்து ஒழிக்கப்பட்ட வேண்டும்?” என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
 பெரியாரது சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஜீவா, தேச விடுதலைப் போராட்டத்திலும், அதே வேகத்துடனும், வீறுடனும் ஈடுபட்டார். 1932 ஆம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கம் தீவிரமடைந்த போது காரைக்குடியில் ஜீவா தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. சட்ட மறுப்பு இயக்க ஆதரவுக் கூட்டங்களில் ஜீவாவின் சொல்வன்மை மக்களை ஆவேசம் கொள்ள வைத்தது. மிரண்டு போன அரசு 07.01.1932 அன்று ஜீவா காரைக்குடிக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். பிரிட்டிஷ் அரசு மறுதினம் முதல் அவர் எங்கும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டுப் போட்டது. ஜீவா, அதை மீறினார். மறு நாள் கோட்டையூரில், தடையை மீறிப் பேசிய போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுவே ஜீவாவின் முதல் சிறைவாசம். இந்தச் சிறைவாசம் ஜீவாவின் அரசியல் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
சிறையிலிருந்த பொழுது மாவீரன் பகத்சிங்கின் தோழர்களான யோகேஸ்வரதத், குந்தலால் ஆகியோரையும், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜீ ஆகியவர்களையும் சந்தித்தார். சோசலிசம், கம்யூனிசம் போன்ற தத்துவங்கள் பற்றியும், சோவியத் யூனியன் பற்றியும் தெரிந்து கொண்டார். பொதுவுடைமை நூல்களையும் படித்தார். 1932 சனவரியில் காங்கிரஸ்;காரனாகச் சிறைபுகுந்த ஜீவா நவம்பரில் பொதுவுடைமைவாதியாக வெளியே வந்தார்.
 பொதுவுடைமைக் கோட்பாட்டின்பால் ஈர்க்கப்பட்டிருந்த தந்தை பெரியார் நடத்திய விடுதலை ஏட்டில் பொதுவுடைமைத் தலைவர் சிந்தனை சிற்பி சிங்கார வேலர், ஜீவா ஆகியவர்களின் கட்டுரைகள் வெளியாகிக் கொண்டுடிருந்தன.
 1932 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவிற்கு பயணம் செய்து திரும்பிய பெரியார், சுயமரியாதை இயக்க ஊழியர் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஜீவாவும் கலந்து கொண்டார். சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் பிரிவாக “சமதர்ம கட்சி” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது “ஈரோட்டுப் பாதை” என்று அழைக்கப்பட்டது. இந்தக் கூட்;டம் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடியான தோழர். சிங்காரவேலர் தலைமையில் நடைபெற்றது. ஜீவாவும் கலந்து கொண்டார். ஜீவாவுக்கு சிங்காரவேலருடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் விஞ்ஞான சோசலிசம், கம்யூனிசம், நாத்திகம் ஆகியவற்றைப் பற்றி புரிந்து கொள்ள வாயப்பு ஏற்பட்டதுடன், சிங்காரவேலாpடமிருந்து கம்யூனிச நூல்களை பெற்று படிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது.
 ஈரோடுத் திட்டத்தின் அடிப்படையில் தமிழ் நாடெங்கும் தீவிரப் பிரச்சாரத்தில் பெரியார் இறங்கினார். முதலாளித்துவ ஒழிப்பு மாநாடு, ஜமீன் ஒழிப்பு மாநாடு, லேவாதேவிக்காரர் வட்டிச் சுரண்டல் ஒழிப்பு மாநாடு என்று பல மாநாடுகள் தமிழகமெங்கும் நடைபெற்றது. இந்த மாநாடுகளில் ஜீவா கலந்து கொண்டு முழங்கினார்.
 1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை எழும்பூர் ஒயிட்ஸ் மெமோரியில் மண்டபத்தில் தந்தை பெரியார், தோழ‌ர் சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் பங்கு பெற்ற நாத்திகர்கள் மாநாடு நடைபெற்றது.
 1928 ஆம் ஆண்டு மீரட் சதி வழக்கு நடைபெற்றது. பொதுவுடைமை வாதிகள் மீது பிரிட்டிஷ் அரசால் போடப்பட்ட வழக்கின் மீது 1933 சனவரி மாதத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு மிகவும் கொூரமானது. மனிதாபிமானமற்ற முறையில் அளிக்கப்பட்டது என உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஐன்ஸ்டீன், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ரோமைன் ரோலன்ட் ஆகியோர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.
 மாவீரன் பகத்சிங் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற கட்டுரையை ஜீவா தமிழாக்கம் செய்தார். அதை தந்தைபெரியார் பதிப்பித்து வெளியிட்டார். அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக வெள்ளை ஏகாதிபத்தியம், பெரியாருக்கும், அவரது சகோதரர் கிருஷ்ணசாமிக்கும், மொழி பெயர்ப்பாளர் ஜீவாவுக்கும் சிறைத் தண்டனை விதித்தது. பிரிட்டிஷ் அரசால் தண்டிக்கப்பட்ட ஜீவா, கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து சிறைச் சாலைகளிலும் மாறி மாறி அடைக்கப்பட்டு ,அலைக்கழிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டார். தமிழக வரலாற்றில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக முதன்முதலாக சிறைபிடிக்கப்பட்டவர் ஜீவாவாகத் தானிருக்க வேண்டும்.
 1934-ஆம் ஆண்டு புரட்சி ஏட்டில் காந்தியை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று அறைகூவல் விட்டார். காரணங்களாவன, காந்தி வர்ணாசிரமத்தை ஒப்புக் கொண்டார்.காந்தி முதலாளித்துவத்தை அழிக்க விரும்பவில்லை. தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையில் சமரசம் ஏற்படுவதையே விரும்பினார். தீண்டாமை ஒழிப்பு, சுயதேவை பூர்த்தி ஆகிய காந்தியின் கருத்துக்கள் சாரமற்றவை.
1934 ஆம் ஆண்டு சனவரியில் புரட்சி ஏட்டில் நாத்திகப் பிரச்சாரம், குட்டி முதலாளித்துவமும், செவிட்டு அரசும் ஆகிய கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகள் ஆட்சேபகரமானது என்று அரசு நடவடிக்கை எடுத்தது. புரட்சி ஏடு நிறுத்தப்பட்டது.
 1935 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியன்று ‘சுயமரியாதை சமதர்மக் கட்சி’ யின் மாநாடு நடைபெற்றது. அக்கட்சியின் கொள்கைகளாவன குருட்டு நம்பிக்கைகளுக்கு எதிராகவும், மத நம்பிக்கைகளுக்கு எதிராகவும், அர்த்தமற்ற சடங்குகளுக்கு எதிராகவும், மக்களிடம் பெரும் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றாலும் இத்தகைய அர்த்தமற்ற சடங்குகளும், மரபுவழி நம்பிக்கைகளும் மக்கள் மனங்களில் இன்னும் ஆழமாக வேரூன்றியுள்ளன. அவற்றைச் சட்டத்தின் மூலம் அல்லாமல் வேறு வழியில் மாற்ற இயலாது. அரசு நிர்வாகமும் ,அமைப்புகளும் ஏழைகளையும் ,உழைக்கும் மக்களையும் ஒடுக்குவதற்கே பயன்படுத்தப்படுகிறது. சாதியப் பாகுபாடுகளை ஒழிப்பதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்க வட்ட மேஜை மாநாடு தவறி விட்டது.
 சுயமரியாதை சமதர்மக் கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்த போது பொதுவுடைமைவாதிகள் ஜீவாவை தொடர்பு கொண்டார்கள். காங்கிரஸ்-சோசலிஸ்ட் கட்சியில் ஜீவா சேர்ந்தார்.
 1935 ஆம் ஆண்டு சென்னை மாநிலத் தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பில் ஜீவா தலைவராகவும், சுந்தரய்யா செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார். அச்சங்கத்தின் தலைவரானார் ஜீவா.
 காங்கிரஸ் கட்சியானது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று, குற்ற பரம்பரைச் சட்ட ஒழிப்பு என்பதாகும். அதாவது குற்ற பரம்பரைச் சட்டத்தின்படி முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த வயது வந்த ஆண்கள் யாரும் இரவில் வீட்டில் தங்கக் கூடாது. அவர்கள் ஊர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இரவுப் பொழுதைக் கழிக்க வேண்டும். மறுத்தால் தண்டனைக்குள்ளாக வேண்டும். காவல் நிலையத்தில் ஆஜரானார்கள் என்பதற்காக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில் அவர்கள் ரேகை வைக்க வேண்டும். எனவே, மக்கள் இந்தச் சட்டத்தை ‘ரேகைச் சட்டம்’ என்று அழைத்தனர். மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வாழும் முக்குலத்தோரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு கொடுமையான சட்டத்தை வெள்ளைக்கார அரசாங்கம் நடைமுறைப் படுத்தயிருந்தது.
காங்கிரஸ் கட்சி 1937 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், ரேகைச் சட்டத்தை ரத்து செய்ய மறுத்தது. ரேகைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜீவா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.இராமமூர்த்தி ஆகியவர்கள் காங்கிரஸ் கமிட்டியின் பல கூட்டங்களிலும் வாதாடிப் பார்த்தார்கள். காங்கிரஸ் கமிட்டி சிபாரிசு செய்தும்,ராஜாஜீ ரத்து செய்ய மறுத்துவிட்டார். இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல மாநாடுகளும், பேரணிகளும் நடத்தப்பட்டது. வெகு மக்களின் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. அடுத்து கூடிய சட்டசபைக் கூட்டத்தில் ரேகைச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
1928 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய ரெயில்வே போராட்டத்திற்கு ஜீவா புத்துயிர் ஊட்டினார். 1937 ஆம் ஆண்டு திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தை ஜீவா முன்னின்று நடத்தினார். சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் இதரப் பகுதிகளிலும் தொழிற்சங்கங்களை அமைப்பதிலும், தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதிலும் ஜீவா முன்னின்று முனைப்புடன் செயல்பட்டார். 1937 ஆம் ஆண்டு மதுரை பசுமலையில் உள்ள மகாலெட்சுமி மில்லில் தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தொழிலாளர்கள் சங்கத்தின் மூலம் போராடினார்கள். ரூhர்வி மில் போராட்டத்திற்கு ஜீவா தலைமை தாங்கி நடத்தினார். போராட்டத்தில் ஜீவா தாக்கப்பட்டார்.
 1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி ஜீவா அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஜனசக்தி இதழ் வெளிவந்தது.
 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கடலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ,ஜீவா மீது தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தியதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, ஜீவா காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார்.
 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது உலகயுத்தம் ஆரம்பமாயிற்று. அந்த யுத்தத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கடுமையாக எதிர்;க்க வேண்டுமென அறைகூவல் விடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். நாடெங்கும் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் நடைபெற்றன. யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் பிரிட்டிஷ் அரசு 1939 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி ஜீவாவை கைது செய்தது. இரண்டரை மாதச் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் தமிழகமெங்கும் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரிட்டிஷ் அரசு ஜீவாவை சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தது. கம்யூனிஸ்ட்கள் மீது அடக்கு முறையை ஏவி விட்டது. ஜீவா தலைமறைவானார்.
 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற கப்பற்படை எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவாகக் கம்யூனிஸ்ட் கட்சி அறை கூவல் விடுத்தது. நாடெங்கும் வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தொழிலாளர்களின் ஊர்வலத்துக்கு ஜீவா தலைமை தாங்கினார். ஊர்வலம் சென்னை பிக்ஷ சி மில்லுக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்தது. காவலர் படை ஊர்வலத்தை தடுத்தது. மேற்கொண்டு ஊர்வலம் சென்றால் துப்பாக்கியால் சுடுவோம் என்று எச்சரித்தது. அப்போது வீராவேசத்துடன் ‘சுடு’ என்று தனது மார்பைத் திறந்து காட்டி ஜீவா முன்னேறவும் ஊர்வலம் தொடர்ந்து சென்றது. காவலர் படை பின் வாங்கியது.
 ஜீவா தனது தலை மறைவு வாழ்க்கையின் போது சென்னை மாநகரத்தையே அதிர வைத்த மாநகராட்சித் தொழிலாளர்கள் போராட்டம் 18 நாட்கள் நடைபெற்றது. அப்போராட்டத்திற்கு வழிகாட்டியவர் ஜீவா.
 1947 ஆம் ஆண்டு தோழர். பத்மாவதியைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார் ஜீவா. திருமணத்துக்குப் பின் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை சென்னை தாம்பரம் பகுதியில், புறம்போக்கு நிலத்தில் குடிசைவாழ் மக்கள் வாழ்ந்த பகுதியில் நடைபெற்றது. ஜீவா தனது இறுதிக்காலம் வரையில் இந்தக் குடிசையில் தான் வாழ்ந்து வந்தார்.
 1948 ஆம் ஆண்டு கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கட்சியின் ஆணைப்படி ஜீவா தலை மறைவானார். ஜீவா இலங்கைக்கு மாற்றுப் பெயரோடு சென்றார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டாக்டர் விக்கிரம் சிங்காவின் வீட்டில் தங்கினார். தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். இலங்கை முழுவதும் சென்று தமிழ் இலக்கியம், இந்திய- இலங்கை உறவு குறித்து சொற்பொழிவாற்றினார். இலங்கையிலிருந்த பொழுது “சோசலிஸ்ட் தத்துவங்கள்” என்ற நூலை எழுதினார். ஒரு ஆண்டுக்குப் பிறகு தமிழகம் திரும்பினார்.
 தலைமறைவு வாழ்க்கையிலிருந்து கொண்டே கேரளத்தில் இருந்து தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழர் வாழும் பகுதியை தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்றப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்புக்கு ஆதரவு திரட்டினார். 1949 ஆம் ஆண்டு ஜீவா கைது செய்யப்பட்டுப் பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 15.02.1950 அன்று சேலம் சிறைச் சாலையில் 22 கம்யூனிஸ்ட்டு கைதிகள் காங்கிரஸ் அரசால் அநியாயமாக, கொடு்ரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தப் படுகொலையைக் கண்டித்து அறிக்கை விடுத்ததுமல்லாமல், ஆர்ப்பாட்டமும் நடத்திய ஒரே தமிழகத் தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா மட்டுமே தான், மற்றத் தலைவர்களும், கட்சிக் காரர்களும் வாய்மூடி மௌனிகளாக வேடிக்கைப் பார்த்து நின்றார்கள்.
 1952 ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஜீவா, வட சென்னைத் தொகுதியிலிருந்து கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினாரகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீவா, சட்டமன்றத்தில் தமிழிலேயே பேசினார்.
 குலக்கல்வித் திட்டத்தை அமுல்படுத்தி ராஜாஜீ ஜனநாயக மரபை மீறிவிட்டார். மேலும் பெற்றோரின் தொழில்களைக் கற்பது என்பது வளரும் தலைமுறையினரை சாதிய கட்டுக்குள் மீண்டும் அடைத்து, வர்ணாசிரமப் பிரிவுச் சுவர்களை உடைக்கவிடாமல் பாதுகாக்கும் முயற்சியாகும் என்றும், இது சமூக சமத்துவம் என்ற அரசியல் சட்டத்திற்கு முரணானது என்றும் சட்டமன்றத்தில் வாதாடினார் ஜீவா. கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உழைப்பாளர் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் மூலம் குலக்கல்வித் திட்டம் சட்டமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
 சட்டமன்றத்தில் ஜீவா மதுவிலக்குச் சட்டம், தொழிலாளர்கள் நலச் சட்டம், பண்ணையாட்கள் பாதுகாப்புச் சட்டம், விபச்சாரத் தடைச்சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்பட குரல் கொடுத்தார்.
 ஜீவா பிறந்த மண்ணான, நாஞ்சில் நாட்டைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தில் ஜீவாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. 1949 ஆம் ஆண்டு அப்போதைய கேரள அரசு, தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான கோரிக்கைகளைக் கொடுக்க மறுத்தது. எனவே, தமிழப் பகுதிகளில் தனிநபர் சத்தியாகிரகம் நடைபெற்றது. ஆனால், திருவிதாங்கூர் அரசோ காவல் துறை முலம் போராட்டத்தை அடக்கியது. விளவங்கோடு தாலுகாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சு{ட்டில் இரண்டு பேர் மரணம் அடைந்தனர்.
 1954 ஆகஸ்ட் 11 ஆம் தேதி விடுதலை தினமாக தமிழ் பகுதிகளில் கொண்டாடப்பட்டது. பட்டம் தாணுப்பிள்ளை அரசு நடத்திய துப்பாக்கிச் சு{ட்டில் 11 பேர் மரணமடைந்தனர். இந்தக் கொடுமையை எதிர்த்து ஜீவா நாஞ்சில் நாட்டிலேயே கண்டனக் கூட்டங்கள் நடத்தினார்.
தமிழ் மக்கள் பெரும்பாலும் வாழ்ந்து வந்த தேவிகுளம்-பீர்மேடு ஆகிய மேற்கு மாகாணப்பகுதிகள், சித்தூர் நெய்யாற்றின் கரை, செங்கோட்டை மேல் பாகம் ஆகிய பகுதிகள் கேரளத்துடன் இருக்க வேண்டும் என்ற அரசின் முடிவை எதிர்த்து பிப்ரவரி 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஊர்வலத்தில் காவல்துறையினர் தடியடிப்பிரயோகம் செய்தனர். அதில் ஜீவாவும், எம்.ஆர். வெங்கட்ராமனும் படுகாயம் அடைந்தனர். ஜீவா தனது அரசியல் வாழ்வில் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலும், காவல்துறை பாதுகாப்பிலும் கழித்தார்.
 1955 ஆம் ஆண்டு ஜீவா சென்னைப் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தனது கொள்கை, கோட்பாடு அடிப்படையில் ஒரு இலக்கிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 1959 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலக்கிய இதழாக ‘தாமரை’ ஏடு வெளியிடப்பட்டது. ஜீவா இறக்கும்வரை அதன் ஆசிரியராக விளங்கினார்.
 முற்போக்குப் படைப்பாளிகளையும், கலைஹர்களையும் ஒன்றுபடுத்தி தமிழகம் தழுவிய அளவில் 1961 ஆம் ஆண்டு மே மாதம் “தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
 ஜீவா எழுதிய நூல்கள்: 1) பாரதியைப் பற்றி 2) மொழியைப் பற்றி 3) புதுமைப் பெண் 4) மதமும் மனித வாழ்வும் 5) கலையும் இலக்கியமும் 6) சங்க இலக்கியத்தில் சமுதாய காட்சிகள் 7) ஜீவாவின் பாடல்கள் 8) சோசலிஸ்ட் தத்துவங்கள் 9) இலக்கியத்தில் சோசலிச யதார்த்தவாதம் 10) கம்பன் கண்ட தமிழகம் 11) கம்பனும் பாரதியும் 12) இலக்கியச் சுவை 13) பாரதி பாடல்கள் 14) பாரதியின் தத்துவ ஞானம் மற்றும் பழமொழிகளையும், வழக்குச் சொல் குறித்த அகராதியையும் தொகுத்து அளித்துள்ளார்.
ஆண்களைவிடப் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் களையப்பட வேண்டும். சமூக, அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கலாச்சாரம் ஆகிய அனைத்துத்துறைகளிலிலும் ஆண்களும் பெண்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். ஆண்கள் அயோக்கியர்களாக இருக்கும் வரை பெண்கள் எப்படி கற்புக்கரசிகளாக இருக்க முடியும் என்பதை ஆண்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால், தங்கள் மனைவியர் மட்டும் கற்புக்கரசியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இந்த பிற்போக்கு சிந்தனை போக்கப்படவேண்டும். பெண்களை விபசாரத்தில் ஈடுபடத்துhண்டும் சமுதாய பொருளாதார அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பெண் விடுதலைக்காக குரல் கொடுத்தார்.
சமுதாயத்தில் நிலவும் சாதி, மத வேறுபாடுகளையும்,சடங்கு சம்பிரதாயங்களையும், கண்மூடித்தனமான மூடப்பழக்க வழக்கங்களையும் தனது இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்துப் போராடினார்.
‘சாதிச் சடங்கால் இழிவடைந்தோம்-நிதம்
 சாமிக்கழுது மனமுடைந்தோம்
 வீதிக்கொரு கோயிலைப் படைத்தோம்-வேறு
 வேலையில்லாது பந்தி புரிந்தோம்’
 ஜீவாவின் முதல் மனைவி கண்ணம்மாள் ஆவார். கண்ணம்மாளின் தந்தை குலசேகரதாஸ். அவர் கடலூரில் இருந்து சட்டசபைக்குத் தேர்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பு சட்டமன்ற உறுப்பினர். ஜீவா-கண்ணம்மாள் மகள் குமுதா. குமுதா தனது தந்தை ஜீவாவை 17 ஆண்டுகள் கழித்தே சந்தித்தார். குமுதா பிறந்த சில நாட்களில் கண்ணம்மாள் கண் மூடினார். ஜீவா தனது இரண்டாவது துணைவியாராக 1947 ஆம் ஆண்டு தோழர். பத்மாவதியைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். பத்மாவதி வாயிலாக உமூh, உமா என்ற இரு பெண் குழந்தைகளையும், ஸ்டாலின் மணிக்குமார் என்ற ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தனர்.
திருமணத்துக்குப் பின் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை சென்னை தாம்பரம் பகுதியில், புறம்போக்கு நிலத்தில் குடிசைவாழ் மக்கள் வாழ்ந்த பகுதியில் நடைபெற்றது. ஜீவா தனது இறுதிக்காலம் வரையில் இந்தக் குடிசையில் தான் வாழ்ந்து வந்தார்.
 1963 ஆம் ஆண்டு சனவரி 18 ஆம் நாள் ஜீவாவுக்கு மார்பு வலி ஏற்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். ஜீவாவின் மரணச் செய்தி கேட்டு தமிழகமே பதறியது. ஜீவாவின் உடல் சென்னை துறைமுகத் தொழிலாளர்கள் சங்க அரங்கத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். ஜீவாவின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஹர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
 ஏழை எளிய பாட்டாளி மக்களின் வறுமையையும், ஏழ்மையையும் தனது பாடல் வரிகள் மூலம் சமுதாயத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டினார்.
 “பாலின்றிப் பிள்ளை அழும்
 பட்டினியால் தாயழுவாள்
 வேலையின்றி நாமழுவோம் - என் தோழனே
 வீடு முச்சூடும் அழும்.”
 “காலுக்குச் செருப்புமில்லை
 கால் வயிற்றுக் கூழுமில்லை
 பாழுக்குழைத்தோமடா – என் தோழனே
 பசையற்றுப் போனோமடா”
 ஜீவா காலமெல்லாம் தான் ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்காக, பட்டாளி மக்களின் விடுதலைக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தார். ஜீவா சிறந்த எழுத்தாளர், கவிஞ‌ர்,மேடை பேச்சாளர், இலக்கிய விமர்சகர்,பத்திரிக்கையாளர் ஆகிய சிறப்புகளைப் பெற்றிருந்தார்.
 நல்ல பண்பாளராகவும்,மனித நேயம் மிக்கவராவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவும், தியாக உணர்வு கொண்டவராகவும், தமது கொள்கையில் தீவிர பிடிப்பு உள்ளவராகவும் விளங்கினார்
.