Monday, August 30, 2010

இந்தியாவின் உள்ளர்ந்த்த பெருமைகள்

இந்தியாவின் உள்ளார்ந்த பெருமைகள்
இந்தியாவின் உள்ளார்ந்த பெருமைகள்இந்தியாவில் தமிழ்நாட்டில் கி.பி.2005 ஆம் வருடம் வரதட்சணை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார்களில் 260 புகார்களில் 200 பொய்யானவை.கி.பி.2006 ஆம் வருடம் கொடுக்கப்பட்ட புகார்களில் 285 புகார்களில் 220 பொய்யானவை என தெரியவந்துள்ளது.மாமியார் மற்றும் மனைவியின் பெற்றோர்களின் பணத்தாசையே பெரும்பாலும் காரணம்.தன் மகளின் ஒழுக்கமான எதிர்காலம் பற்றி சிறிதும் கவலையில்லை.ஆக சட்டங்களால் சமுதாய கட்டமைப்பை அழிக்கத்தான் முடியும்.இந்தியாவில் உள்ள 7 லட்சம் கிராமங்களில் மொத்தம் 12,400 காவல் நிலையங்களே உள்ளன.பெரும்பாலும் தேர்தல் சமயத்தில் மட்டுமே காவலர்கள் 7 லட்சம் கிராமங்களுக்கும் வருவார்கள்.நாமக்கல்லில் இந்தியாவிலேயே அதிக லாரிகள் வைத்திருக்கும் முதலாளிகள் இருக்கிறார்கள்.டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் கூட கனரகவாகனங்கள் பற்றி ஆய்வு நடத்திட நாமக்கல்லுக்குத்தான் வருகிறார்கள்.அமெரிக்காவில் சாலையோர உணவகங்கள் எனப்படும் மோட்டல்களில் 80% குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல் சமுதாயத்தினர் கைப்பற்றியுள்ளனர்.இங்கிலாந்து மான்செஸ்டர் பஞ்சாலைகளை ராம்காடியா சமுதாயத்தினர் கைப்பற்றியுள்ளனர்.திருப்பூரில் ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய்களுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் வெறும் 300 தமிழர்கள் மட்டுமே! இவர்களில் 99% பேர் படிப்பில் 6 ஆம் வகுப்பைத் தாண்டாதவர்கள்.சுதந்திரம் வாங்கிய போது கி.பி.1947 இல் உலக பொருளாதார வளர்ச்சி 4.2%.இந்திய பொருளாதார வளர்ச்சி 2% மட்டுமே!இன்று(அமெரிக்காவைச் சார்ந்திருப்பதால்) உலக பொருளாதார வளர்ச்சி(கி.பி.2007)3.1%இந்திய பொருளாதார வளர்ச்சி 7%நம்மைப் பார்த்தே ஆங்கிலேயர்கள் சமுதாயக் கல்வியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment