Monday, March 14, 2011

பெருந்தலைவர் காமராஜர்

காமராஜர் முதல்வராக இருந்தபோது, மதுரைக்குச் சென்றார். இரவில் அவர் தங்குவதற்கு விருந்தினர் மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர் மாளிகையில் மின்சாரம் இல்லாததால், மின்வாரிய ஊழியர்கள் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.காமராஜர், களைப்போடு காத்திருந்த நிலையில், மின்சாரம் வருவதாய் தெரியவில்லை.
உடனே அங்கிருந்தவர்களிடம், "கட்டிலைத் தூக்கி வந்து வேப்பமரத்தடியில் போடு' எனக் கூறினார். எவ்வித தயக்கமும் இன்றி அந்தக் கட்டிலில் படுத்து ஓய்வெடுக்கத் தயாரானார்.அப்போது அவர் தலைமாட்டில், ஒரு போலீஸ்காரர் நின்றுகொண்டு இருந்தார். அவரைப் பார்த்து, "நீ ஏன் இங்கு நிற்கிறாய்? என்னை யாரும் தூக்கிக்கொண்டு போய்விட மாட்டார்கள். நீ போய் தூங்கு...' என சொல்லி, அவரை அனுப்பி விட்டு, படுத்து உறங்கினார் முதல்வர் காமராஜர். அத்தனை எளிமையாய் முதல்வர்கள் இருந்தது அந்தக் காலம்...

No comments:

Post a Comment