Sunday, December 15, 2013

வள்ளல் எம்ஜிஆர்!- 2 துரைமுருகன் கதை…

வள்ளல் எம்ஜிஆர்!- 2 துரைமுருகன் கதை
எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலில் இன்றும் இருக்கும் துரைமுருகன். இவர் கல்லூரி படிப்பு முடித்து, சட்டக்கல்லூரியில் படித்து ஒரு நிலையை அடையும் வரை அனைத்து உதவிகளையும் செய்தவர் வள்ளல் எம்ஜிஆர்தான். ஆனால் இதே துரைமுருகன், திமுக முகாமுக்குப் போய் எம்ஜிஆரையே எதிர்த்து அரசியல் களம் கண்டார். ஆனால் கண்டுகொள்ளவே இல்லை எம்ஜிஆர். துரைமுருகன் திமுகவுக்குப் போய்விட்டார் என்பதற்காக எம்ஜிஆர் தன் இயல்பை மாற்றிக் கொள்ள முடியுமா என்ன!
துரைமுருகன் சொல்கிறார்: ‘அவனுக்குப் பிடித்த அரசியல் பாதையை அவன் தேர்வு செய்து கொண்டான்’. என் அரசியல் பற்றி புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் கருத்து இவ்வளவுதான். அதற்காக நான் அவரது வளர்ப்பு மகன்களில் ஒருவன் என்ற பெருமையை எப்போதும் மறந்ததில்லை. மறைத்ததுமில்லை. விட்டுக் கொடுத்ததுமில்லை!  தான் செய்த நன்மைகளை எங்கும் விளம்பரப்படுத்திக் கொள்ளாத ஒரு அரசியல்வாதியை உங்களால் பார்க்கவே முடியாது. ஆனால் எம்ஜிஆர் மட்டும் அதில் விதிவிலக்கு!”
இன்னொருவர் பரிதி இளம்வழுதி. திமுகவில் அமைச்சராக இருந்தபோதே எம்ஜிஆர் புகழ் பாடியவர்களுள் முக்கியமானவர். “தன்னை நம்பியவர்களை புரட்சித் தலைவர் என்றுமே கைவிட்டதில்லை. நான் இருந்தது திமுக என்றாலும், எம்ஜிஆரை புரட்சித் தலைவர் என்று மட்டுமே அழைத்திருக்கிறேன். காரணம், எனது இந்த வாழ்க்கை அவர் தந்ததுதான்!” என்கிறார் பரிதி.
எம்ஜிஆர் படிக்க வைத்த இன்னொரு பிரபலம் கோவை சரளா! இவரிடம் எம்ஜிஆர் பற்றி முழுசாக பேசக் கூட முடியாது. புரட்சித் தலைவர் என்று சொன்னாலே, கர கரவென்று கண்ணீரால்தான் பேசுவார் இந்த ‘நகைச்சுவை அரசி’!
வெளியில் தெரியாத அல்லது காட்டிக் கொள்ள விரும்பாத எத்தனையோ பேருக்கு எம்ஜிஆர் தாயாக தந்தையாக இருந்து  உதவியிருக்கிறார்.

No comments:

Post a Comment