Sunday, December 15, 2013

வள்ளல் எம்ஜிஆர்! -5

வள்ளல் எம்ஜிஆர்! -5
ராஜீவ் காந்தியை மீறி பிரபாகரனை விடுவிக்க வைத்தவர்..
ஈழப் போரில் எம்ஜிஆரின் பங்கு பற்றி பல கட்டுரைகள் தகவல்களைப் படித்திருப்பீர்கள். பலருக்கும் தெரியாத விஷயம்… எம்ஜிஆரைத் தாண்டி ஈழ விவகாரத்தை ராஜீவ் காந்தி கையாள விரும்பியது.
அவரது அந்த முயற்சியின் விளைவுதான், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கிட்டத்தட்ட கைது செய்து, டெல்லி நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தது. அந்த சிறையிலிருந்து அவரை விடுதலை செய்தவர் எம்ஜிஆர்!
“அண்ணா.. ராஜீவ் காந்தி என்னை ரொம்பவே மிரட்டுகிறார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. நான் என்ன செய்யட்டும்?” என்று, தனக்குப் பக்கத்தில் தனக்குப் போன் செய்த எம்ஜிஆரிடம் கேட்கிறார் பிரபாகரன்.
அதற்கு எம்ஜிஆர் சொன்ன பதில்: “நீங்கள் எந்த ஒப்பந்ததிலும் கையெழுத்திட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்று கூறிவிட்டு, “உடனடியாக பிரபாகரனை ஈழத்துக்கு அனுப்பி வையுங்கள்,” என்று மத்திய அரசிடம் பிடிவாதமாகக் கூறிவிட்டார். அப்போது ராஜீவின் பிரதிநிதியான தீக்ஷித் பிரபாகரன் அருகிலேயே கண்கொத்திப் பாம்பாய் கவனித்துக் கொண்டிருக்கிறார் அனைத்தையும்.
இதை பிரபாகரன் தெரிவித்ததும், தீக்ஷித்தை போனிலேயே எச்சரித்த முதல்வர் எம்ஜிஆர், “பிரபாகரனை மரியாதையுடன் நடத்துங்கள்!” என்றும் உத்தரவிடுகிறார்.
விளைவு, பிரபாகரன் ஈழத்துக்கு திரும்புகிறார். அவர் திரும்பிய பிறகு, கனவிலும் நினைக்க முடியாத ஒரு பெரும் தொகையை ஈழப் போராட்டத்துக்காக கொடுத்தனுப்பிய பெருந்தகைஎம்ஜிஆர்!
இதை இன்றும் ஒரு சாட்சியாக நின்று கூறிக் கொண்டிருப்பவர் ,  ஈழத்தின் உற்ற தோழராகத் திகழும் பழ நெடுமாறன்!

No comments:

Post a Comment